Ravanasamudram Panchayat

pan1

இன்று உள்ளாட்சிகள் தினம். இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில் கிராம மகாசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நம் ஊர் ஊராட்சி மன்றத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் இரவணசமுத்திரம் நலக் கமிட்டி கௌரவப் படுத்தப்பட்டது. கடையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் திருமதி. புவனேஸ்வரி நீலகண்டன் மற்றும் நலக் கமிட்டி சார்பாக திரு. ரமணி (எ) சங்கர சுப்பிரமணியன் இருவருக்கும் பொன்னாடை போற்றப்பட்டது. மேலும் நலக் கமிட்டிக்கு ஒரு நினைவு பரிசும் வழங்கினார்கள். கூட்டம் 11.00 மணி முதல் 12.15 மணி முடிய நடந்தது.